எது­வித தாம­தங்­களும் ஏற்­ப­டாது.


உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள இடைக்­காலத் தடை­யுத்­த­ர­வி­னை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சு செயற்­ப­டாத நிலையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் ஏற்­பா­டு­களை வழ­மை­போன்று தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.
2019ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் அவ­ரது பத­விக்­கா­லத்­திலே திணைக்­க­ளத்­துக்கு சகல அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தார். முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பத­விக்­கா­லத்தில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அரச ஹஜ் குழு அவ­ரது பதவி இழப்­புடன் இயங்­கா­தி­ருந்த நிலை­யிலே அவற்றின் அதி­கா­ரங்­களும், திணைக்­க­ளத்­துக்கு முன்னாள் அமைச்சர் ஹிஸ்­புல்­லா­வினால் வழங்­கப்­பட்­டன.
அடுத்த வருட ஹஜ் ஏற்­பா­டு­களில் எது­வித தாம­தங்­களும் ஏற்­ப­டாது. தற்­போது ஹஜ் முகவர் நிய­ம­னங்­க­ளுக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்­தப்­பட்டு வரு­கி­றது. எதிர்­வரும் 18ஆம் திக­தி­வரை நேர்­மு­கப்­ப­ரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் முகவர் நிலை­யங்கள் பெற்­றுக்­கொள்ளும் புள்­ளி­களின் அடிப்­ப­டையில் ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­படும்.
2019ஆம் ஆண்டு ஹஜ் தொடர்­பாக சவூதி ஹஜ் அமைச்சர் எதிர்­வரும் 28ஆம் திகதி கூட்­ட­வுள்ள ஹஜ் மாநாட்­டுக்கு இது­வரை அழைப்பு கிடைக்­க­வில்லை. இம்­மாத இறு­திக்குள் நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடும் என்பதால் புதிதாக நியமனம் பெறும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரே மாநாட்டில் கலந்து கொள்வார் என்றார்.
-Vidivelli

Comments